இந்து மத கடவுள்களை தவறாக சித்தரித்ததை கண்டித்து நாளை பாஜ அறவழி போராட்டம்

நாளை போராட்டம்... இந்து மத கடவுள்களை தவறாக சித்தரித்ததை கண்டித்து நாளை அறவழியில் போராட்டம் நடத்தப் போவதாக தமிழக பாஜக தலைவர் எல்.முருகன் தெரிவித்துள்ளார்.

பாஜக தலைமை அலுவலகமான கமலாலயத்தில் காமராஜருடைய பிறந்தநாள் விழா பிறந்தநாள் கொண்டாடப்பட்டது. பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய பாஜக தலைவர் எல். முருகன் அமைதியாக இருக்கும் தமிழ்நாட்டில் இந்து கடவுள்களை ஆபாசமாக சித்தரித்து வரும் கருப்பர் கூட்டம் யூடியூப் சேனலை தடை செய்ய வேண்டும்.