இதுவரை இல்லாத அளவிற்கு நாளொன்றுக்கு அதிகபட்ச கொரோனா பதிவு

கனடாவில் இதுவரை இல்லாத அளவு நாளொன்றுக்கான கொரோனா வைரஸ் (கொவிட்-19) தொற்று பாதிப்பு பதிவாகியுள்ளது என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் வைரஸ் தொற்றினால், ஏழாயிரத்து 872பேர் பாதிக்கப்பட்டதோடு, 112பேர் உயிரிழந்துள்ளனர். கனடாவில் வைரஸ் தொற்று பரவத் தொடங்கியதிலிருந்து பதிவான நாளொன்றுக்கான அதிகப்பட்ச பாதிப்பு எண்ணிக்கை இதுவாகும்.

கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்ட 28ஆவது நாடாக விளங்கும் கனடாவில், இதுவரை மொத்தமாக நான்கு இலட்சத்து 23ஆயிரத்து 054பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். மேலும், 12ஆயிரத்து 777பேர் உயிரிழந்துள்ளனர்.

மேலும், 71ஆயிரத்து 542பேர் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதில் 530பேரின் நிலை மிகவும் கவலைக்கிடமாக இருப்பதாக மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

அத்துடன், மூன்று இலட்சத்து 38ஆயிரத்து 735பேர் வைரஸ் தொற்றிலிருந்து மீண்டு வீடு திரும்பியுள்ளனர்.