குடியேற்ற இலக்குகளை நிர்ணயித்த கனடா... தொழிலாளர் பற்றாக்குறையை நீக்க திட்டம்

கனடா: தொழிலாளர் பற்றாக்குறையை நீக்க திட்டம்... 2025 ஆம் ஆண்டுக்குள் 1.45 மில்லியன் புலம்பெயர்ந்தோரை வரவழைத்து, தொழிலாளர் பற்றாக்குறையைப் போக்குவதற்கு கனடா குடியேற்ற இலக்குகளை நிர்ணயித்துள்ளது.

“ இது எனக்கு எளிமையானது. கனடாவுக்கு அதிகமான மக்கள் தேவை,” என்று கனடாவின் குடிவரவு, அகதிகள் மற்றும் குடியுரிமை அமைச்சர் சீன் ஃப்ரேசர் செய்தியாளர் கூட்டத்தில் தெரிவித்தார்.

கொரோனா வைரஸ் தொற்றுநோயால் கிட்டத்தட்ட ஒரு மில்லியன் வேலையைவிட்டுச்சென்ற தொழிலாளர்களின் வெற்றிடங்களை நிரப்ப அரசாங்கம் எதிர்பார்க்கிறது, என்றார்.

புதிய குடியேற்றத் திட்டம் 2023 இல் 465,000 பேரை உள்வாங்குவதை நோக்கமாகக் கொண்டுள்ளது, இது 2025 இல் 500,000 ஆக உயரும். கனேடிய குடிவரவுத் துறை கடந்த ஆண்டு 405,000 புதியவர்கள் நாட்டுக்கு வந்ததாக தெரிவித்துள்ளது.