சவுதி – ஹவுதி கிளர்ச்சியாளர்களுக்கு மத்தியில் போர்நிறுத்த பேச்சுவார்த்தை

ஏமன்: போர் நிறுத்த பேச்சுவார்த்தை... சவுதி அரேபிய அரசிற்கும், ஹவுதி கிளர்ச்சியாளர்களுக்கும் இடையே போர் நிறுத்தம் தொடர்பாக ஏமன் நாட்டில் பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது.

சவுதி அரேபியா ஆதரவுடன் இயங்கிவந்த ஏமன் அரசை கடந்த 2014ஆம் ஆண்டு ஹவுதி கிளர்ச்சியாளர்கள் அப்புறப்படுத்தியதோடு, பல நகரங்களையும் கைப்பற்றினர்.

ஏமன் அரசுக்கு ஆதரவாக களமிறங்கிய சவுதி ராணுவம், ஈரான் ஆதரவுடன் இயங்கிவரும் ஹவுதி கிளர்ச்சியாளர்கள் மீது போர் தொடுத்தது.

8 ஆண்டுகளாக நடைபெற்றுவரும் சண்டையில் இதுவரை பத்தாயிரத்திற்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். அண்டை நாடான ஓமன் எடுத்த முன்னெடுப்பால் தற்போது இரு தரப்பினருக்கும் இடையே அமைதி பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது.