இன்று 12 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு

சென்னை : சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள செய்திகுறிப்பில் தெரிவிக்கப்பட்டு இருப்பதாவது, தென்கிழக்கு அரபிக்கடல் மற்றும் அதனை ஒட்டிய இலட்சதீவு பகுதிகளில் ஒரு வளி மண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது.

மேற்குதிசை காற்றின் வேகமாறுபாடு காரணமாக, இன்று தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் வருசில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

அந்த வகையில் கோயம்புத்தூர் மாவட்டத்தின் மலை பகுதிகள், நீலகிரி, தேனி, திண்டுக்கல், சேலம், தர்மபுரி, கிருஷ்ணகிரி, திருவண்ணாமலை, திருப்பத்தூர், வேலூர், இராணிப்பேட்டை மற்றும் செங்கல்பட்டு மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யவாய்ப்புள்ளது.

வருகிற 25.09.2023 முதல் 30.09.2023 வரை தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒரிய இடங்களில் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.