இன்றும் ஒடிசாவில் கனமழைக்கு வாய்ப்பு

இந்தியா: கடந்த சில நாட்களாகவே ஒரு சில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய கனமழையும், மேலும் சில இடங்களில் லேசான முதல் மிதமான கனமழையும் பெய்து கொண்டு வருகிறது. இந்த நிலையில் இன்றும் ஒடிசாவில் கனமழை பெய்யும் எனவும், மயூர்பஞ்ச், பாலசோர், கியோஞ்சர், கட்டாக், ஜாஜ்பூர், பாலசோர் மற்றும் பத்ரக், பௌத், நாயகர், குர்தா, ராயகடா, கோராபுட், மல்கன்கிரி போன்ற பகுதிகளுக்கு மஞ்சள் எச்சரிக்கையும் விடுக்கப்பட்டுள்ளது.

இதை தொடர்ந்து கஜபதி, ராயகடா, கலாஹண்டி, நபரங்பூர், கோராபுட் மற்றும் மல்கங்கிரி ஆகிய மாவட்டங்களிலும் இன்று கனமழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.

மேலும், ஒடிசா மாநிலத்தை சேர்ந்த சுந்தர்கர், ஜார்சுகுடா, பர்கார், சம்பல்பூர், தியோகர் போன்ற பகுதிகளுக்கு எச்சரிக்கையும் விடுக்கப்பட்டுள்ளது. மேலும், உத்தரகாண்ட் மாநிலத்திற்கு அடுத்த 4 நாட்களுக்கு வானிலை மையம் மஞ்சள் எச்சரிக்கை ஒன்று விடுத்துள்ளது.

உத்தரபிரதேசத்தின் பல்வேறு பகுதிகளில் இடி மற்றும் பலத்த காற்றுடன் கனமழை பெய்யும் என அறிவிக்கப்பட்டுள்ளது. உத்திரபிரதேச மாநிலத்தில் உள்ள யமுனாநகர், மொராதாபாத், அம்ரோஹா, நரோரா, சந்தௌசி, சம்பல், சஹாஸ்வான், கஸ்கஞ்ச் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளில் கனமழை பெய்யும் எனவும், ஹிசார், ஜிந்த், நர்வானா, கைதால், கோஹானா, கர்னால், பானிபட், ரோஹ்தக், பிவானி, சஹாஸ்வான் ஆகிய மாவட்டங்களுக்கு எச்சரிக்கையும் விடுக்கப்பட்டுள்ளது.