இன்று கடலோர மாவட்டங்களில் இடி, மின்னலுடன் கூடிய அதி கனமழைக்கு வாய்ப்பு

சென்னை: வடகிழக்கு பருவமழை காரணமாக தமிழகத்தில் கடந்த சில நாட்களாகவே தொடர்ந்து கனமழை பெய்து கொண்டு வருகிறது. அந்த வகையில், இன்றும் நாளையும் கன்னியாகுமரி மற்றும் திருநெல்வேலி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை மையம் எச்சரித்து உள்ளது.

மேலும் நகரின் பல்வேறு பகுதிகளில் தொடர்ந்து கனமழை பெய்து வந்தாலும் சென்னை, கோவை, ஈரோடு, திண்டுக்கல், திருவள்ளூர், ராமநாதபுரம், வேலூர் ஆகிய மாவட்டங்களில் இயல்பான வெப்பநிலையை காட்டிலும் 3டிகிரி செல்ஸியஸ் அளவுக்கு வெப்பம் கூடுதல் வெப்பம் நிலவுவதாக பொதுமக்கள் அசௌகரியம் தெரிவித்து உள்ளனர்.

இதையடுத்து சென்னையை பொறுத்த வரையிலும் அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் மேக மூட்டத்துடன் காணப்படும் என்றும், நகரின் ஒரு சில பகுதிகளில் கனமழை பொழியலாம் என்றும் அறிவிக்கப்பட்டு உள்ளது.
இதற்கு அடுத்ததாக, மத்திய வங்கக்கடல் பகுதிகளில் இன்று சூறாவளி காற்று அதி வேகமாக 110 கிலோ மீட்டர் வேகத்தில் வீசும் என்பதனால் மீனவர்கள் கடலுக்குள் மீன் பிடிக்க செல்வதை தவிர்த்து கொள்ளும்படி அறிவிக்கப்பட்டு உள்ளது.