மேற்குதிசை காற்று வேக மாறுபாட்டால் மிதமான மழை பெய்ய வாய்ப்பு

சென்னை: மிதமான மழை பெய்ய வாய்ப்பு.... மாநிலம் முழுதும் மேற்கு திசை காற்று வேக மாறுபாட்டால், சில மாவட்டங்களில் மிதமான மழை பெய்யும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட அறிவிப்பு: மேற்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக இன்று முதல் வரும், 18ம் தேதி வரை, தமிழகம் மற்றும் புதுச்சேரியில், சில மாவட்டங்களில் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளது.

சென்னையில் வானம் மேக மூட்டத்துடன் காணப்படும். நகரின் சில இடங்களில் மிதமான மழை பெய்யும். அதிகபட்சம், 36 டிகிரி செல்ஷியஸ் வரை வெயில் அடிக்கும்.நேற்று காலை நிலவரப்படி, அதிகபட்சமாக காஞ்சிபுரம் மாவட்டத்தில், 5 செ.மீ., மழை பெய்துள்ளது. கும்மிடிப்பூண்டி, ஸ்ரீபெரும்புதுார், 2 செ.மீ, மழை பெய்துள்ளது.

ஆந்திர கடலோரம், மத்திய மேற்கு வங்க கடல் பகுதிகளில், மணிக்கு, 60 கி.மீ., வேகத்தில் சூறாவளி காற்று வீசும். குமரிக் கடல், மன்னார் வளைகுடா மற்றும் தமிழக தென் கடலோர பகுதிகளில் பலத்த காற்று வீசுகிறது. எனவே, மீனவர்கள் இன்று வரை கடலுக்குள் செல்ல வேண்டாம். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.