தமிழகத்தில் போக்குவரத்து விபத்துகளை தவிர்க்க சாலை போக்குவரத்து விதிகளில் மாற்றம்

சென்னை: சாலை போக்குவரத்து விதிகளில் மாற்றம் ... தமிழகத்தில் போக்குவரத்து விபத்துகளை தவிர்க்க சாலை போக்குவரத்து விதிகளில் மாற்றம் செய்யப்பட்டு உள்ளது. எனவே அதன் படி ஆம்புலன்சுக்கு வழிவிடவில்லை என்றால் 10 ஆயிரம் ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டு உள்ளது.

அதனால் ஆம்புலன்சிற்கு வழி விடாத எல்லா வாகனங்களுக்கும் இந்த அபராதத் தொகை பொருந்தும். மேலும் அதுமட்டுமில்லாமல் தீயணைப்பு வாகனங்களுக்கு வழிவிடவில்லை என்றாலும் 10 ஆயிரம் ரூபாய் அபராதம் விதிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் தேவையின்றி ஹார்ன் அடித்தால் 1000 ரூபாய் அபராதம் விதிக்கப்படும் என்றும், சாலைகளில் ஆபத்தான முறையில் வாகனம் ஓட்டினால் ரூ.10,000 அபராதம் விதிக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அனுமதிக்கப்பட்ட அளவை விட அதிக சரக்கு ஏற்றிக்கொண்டு செல்லும் வாகனங்களுக்கு 20 ஆயிரம் ரூபாய் அபராதம் விதிக்கப்படும்.

இதையடுத்து குடிபோதையில் வாகனம் ஓட்டுபவருக்கு மட்டுமின்றி அவருடன் பயணிக்கும் நபருக்கும் இனி அபராதம் விதிக்கப்படும் என புதிய மாற்றம் கொண்டுவரப்பட்டுள்ளது. மேலும் ரேஸிங் செய்யும் வகையில் வண்டி ஓட்டினால் 10 ஆயிரம் ரூபாய் அபராதம் விதிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.