முதலமைச்சரின் தாயார் உடல் தகனம்; தமிழக ஆளுநர் இரங்கல்

தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியின் தாயார் தவுசாயம்மாள், அவருக்கு வயது 93. இவர் சேலத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் முதுகு வலிக்காக சிகிச்சை பெற்று வந்ததார். இந்நிலையில் மாரடைப்பு காரணமாக இன்று அதிகாலை 1 மணியளவில் காலமானார்.

தகவல் அறிந்து சேலம் புறப்பட்டுச் சென்ற முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தாயாரின் உடலுக்கு கண்ணீர் மல்க அஞ்சலி செலுத்தினார். தவுசாயம்மாளுக்கு பழனிசாமியுடன் கோவிந்தராஜ் என்ற மகனும் விஜயலட்சுமி என்ற மகளும் உள்ளனர்.

முதலமைச்சரின் தாயார் உடலுக்கு அமைச்சர்கள், அதிகாரிகள், உறவினர்களும் அஞ்சலி செலுத்தினர். அரசியல் தலைவர்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

இந்நிலையில் மறைந்த முதலமைச்சரின் தாயார் தவுசாயம்மாள் உடல் வீட்டில் இருந்து மயானத்துக்கு ஊர்வலமாக கொண்டு வரப்பட்டது. சேலம் மாவட்டம் சிலுவம்பாளையத்தில் உள்ள மயானத்தில் உறவினர்களின் இறுதி அஞ்சலிக்கு பின்னர் அவரது உடல் தகனம் செய்யப்பட்டது.

இதற்கிடையே, முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியின் தாயார் மறைவிற்கு தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோகித் இரங்கல் தெரிவித்துள்ளார்.