கேரளாவில் அங்கன்வாடி குழந்தைகளுக்கு பால், முட்டை வழங்கும் திட்டத்தை முதல்வர் பினராயி விஜயன் தொடங்கி வைப்பு

கேரளா: நாடு முழுவதும் உள்ள அனைத்து அரசு பள்ளிகளிலும் மதிய உணவு வழங்கும் திட்டத்தை மத்திய – மாநில அரசுகள் செயல்படுத்தி கொண்டு வருகின்றன. மேலும் சில மாநில அரசுகள் வாரத்தில் 4, 5 முறை முட்டைகள், பயிர்கள், பால், காய்கறி நிறைந்த சாதம் மற்றும் சத்துமாவு போன்ற வற்றை வழங்கி கொண்டு வருகிறது. குறிப்பாக தமிழகம், கேரளா மற்றும் ஆந்திரா போன்ற மாநிலங்கள் மாணவர்களுக்கு முறையாக உணவு வழங்கி கொண்டு வருகின்றன.

அதன்படி ஏழை எளிய குழந்தைகளுக்கு ஊட்டச்சத்து கொடுக்க வேண்டும் என்ற நோக்கில் கேரளாவில் அங்கன்வாடி குழந்தைகளுக்கு பால், முட்டை வழங்கும் திட்டம் தொடங்க இருப்பதாக தெரிவிக்கப்பட்டது.

இந்த நிலையில் அந்த திட்டத்தை முதல்வர் பினராயி விஜயன் தொடங்கி வைத்தார். அதன் படி 3 முதல் 6 வயது வரை உள்ள குழந்தைகளுக்கு பால், முட்டை வழங்கும் திட்டம் தொடங்கப்பட்டது. அதன் படி 33,115 அங்கன்வாடிகளில் 4 லட்சம் குழந்தைகளுக்கு வாரம் 2 நாள் பால், முட்டை வழங்கப்படும்.

கேரளாவில் பரவி வரும் தக்காளி காய்ச்சலுக்கு 85 குழந்தைகள் பாதிக்கப்பட்டுள்ளதாக அம்மாநில சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. அதனால் குழந்தைகளுக்கு ஊட்டச்சத்து கொடுக்கும் நோக்கில் இந்த திட்டத்தை முதல்வர் அவர்கள் தொடங்கி வைத்துள்ளார். மேலும் இந்த திட்டத்திற்கு ஏகப்பட்ட பெற்றோர்கள் வரவேற்பு தெரிவித்து வருகின்றனர்.