குடியரசு தலைவர் பிறந்தநாளையொட்டி முதலமைச்சர் ஸ்டாலின் வாழ்த்து

சென்னை: திரௌபதி முர்மு 1958 -ம் ஆண்டு ஜூன் 20-ம் தேதி ஒடிசாவின் மயூர்பஞ்ச் மாவட்டத்தின் பைடாபோசி கிராமத்தில் பிறந்தார். இவரது தந்தையின் பெயர் பிராஞ்சி நாராயண் டுடு. புட்டி டுடு என்ற இவரின் இயற்பெயர் பள்ளி ஆசிரியரால் திரௌபதி என பெயர் மாற்றப்பட்டது. .

முர்மு ரமா தேவி மகளிர் கல்லூரியில் படித்தார். இவர் மே 2015 முதல் ஜார்க்கண்டின் 12 சூலை 2021 வரை இந்த மாநிலத்தின் 8-வது ஆளுநராக இருந்தார். ஜார்க்கண்டு மாநிலம் 2000-ம் ஆண்டு உருவானதிலிருந்து ஐந்தாண்டு காலத்தை நிறைவு செய்த முதல் ஆளுநர் இவர் ஆவார்.

மேலும் 2022இல் நடைபெற்ற குடியரசு தலைவர் தேர்தலில் பாஜக கூட்டணி வேட்பாளராக அறிவிக்கப்பட்டு வெற்றி பெற்றார். இந்த நிலையில் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்தாதவது,

மாண்புமிகு இந்திய ஜனாதிபதி திரௌபதி முர்மு அவர்களுக்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள் . நமது மாண்புமிகு ஜனாதிபதி அவர்களுக்கு நல்ல ஆரோக்கியம், மகிழ்ச்சி மற்றும் பொது வாழ்க்கைக்கு ஊக்கமளிக்க வாழ்த்துகிறேன். என அதில் அவர் குறிப்பிட்டு உள்ளார்.