அமெரிக்காவின் மீது கடும் குற்றச்சாட்டை கூறியுள்ள சீனா

சீனா: உலகின் மிகப்பெரிய அணு ஆயுதக் கிடங்கை அமெரிக்கா வைத்திருப்பதாக சீனா குற்றம் சுமத்தியுள்ளது.

அமெரிக்காவின் ராணுவ தலமையகமான பென்டகன் அண்மையில் வெளியிட்ட ஆண்டறிக்கையில் சீனாவிடம் வரும் 2035 ஆம் ஆண்டில் ஆயிரத்து 500 அணு ஆயுதங்கள் இருக்கும் என தெரிவித்திருந்தது.

இந்த அறிக்கைக்கு சீனாவின் பாதுகாப்பு அமைச்சகம் மறுப்பு தெரிவித்ததோடு அபத்தமான முறையில், சீனாவின் அணு சக்திகளின் நவீனமயமாக்கல் பற்றி யூகிக்கப்பட்டிருப்பதாகவும் கூறியுள்ளது.

அதுமட்டுமல்லாது , அமெரிக்கா தனது சொந்த அணுசக்தி கொள்கையைப் பற்றி சிந்திக்க வேண்டும் எனவும், பிரிட்டன் மற்றும் ஆஸ்திரேலியாவுடன் சேர்ந்து அமெரிக்கா அணுசக்தி உற்பத்தியை நடத்தி வருவதாகவும் சீனா குற்றம் சுமத்தியுள்ளது.