மருத்துவர் அடித்ததாக கூறி செவிலியர்கள் பணி புறக்கணிப்பு

மருத்துவர் அடித்ததாக கூறி போராட்டம்... தர்மபுரி, பென்னாகரம் அரசு மருத்துவமனையில் பணியின்போது மகப்பேறு மருத்துவர் செவிலியரை அடித்ததாக கூறி செவிலியர்கள் பணி புறக்கணித்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.

பென்னாகரம் மருத்துவமனையானது கடந்த எட்டு ஆண்டுகளுக்கு முன்னர் அரசு தலைமை மருத்துவமனையாகத் தரம் உயர்த்தப்பட்டது.

இம்மருத்துவமனைக்கு பென்னாகரம் மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளான கூத்தபாடி, தாசம்பட்டி, சின்னம்பள்ளி, பெரும்பாலை, ஒகேனக்கல், பி.அக்ரஹாரம் உள்ளிட்ட பகுதிகளிலிருந்து தினந்தோறும் புற நோயாளிகளாக சுமார் 1000க்கும் மேற்பட்டவர்கள் உள்நோயாளிகளாக சுமார் 500க்கும் மேற்பட்டவர்கள் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

பென்னாகரம் அரசு மருத்துவமனையில் 40 நிரந்தர செவிலியர்கள் பணியாற்றி வருகின்றனர். இந்த நிலையில் திங்கள்கிழமை சிகிச்சைக்கு வந்த நோயாளிகளின் மேல் சிகிச்சை அறிக்கையை சரியாக எழுதவில்லை மகப்பேறு மருத்துவர், பெண் செவிலியரை அடித்ததாகக் கூறப்படுகிறது.

இதனால், மனமுடைந்த செவிலியர் பணிக்கு வராது, மருத்துவமனை நிர்வாகம் பேச்சு வார்த்தைக்கு அழைக்காததாலும், மருத்துவர் மன்னிப்பு கேட்காததைக் கண்டித்து பணியில் உள்ள 25 நிரந்தர செவிலியர்கள் அவசர சிகிச்சையைத் தவிர மற்ற பணியைப் புறக்கணித்தனர்.

இதனால் புறநோயாளிகள் மற்றும் உள் நோயாளிகள் அவதிக்குள்ளாகின்றனர்.