அட்லாண்டிக் பெருங்கடலில் மாயமான நீர்மூழ்கி கப்பலை தேடும் பணி

கனடா: நீர்மூழ்கி கப்பல் மாயம்... டைட்டானிக் கப்பலை பார்வையிட சென்றபோது, 5 கோடீஸ்வரர்களுடன் அட்லாண்டிக் பெருங்கடலில் மாயமான நீர்மூழ்கியில் ஆக்ஸிஜன் இருப்புக்காக வரையறுக்கப்பட்டிருந்த 96 மணி நேரக்கெடு கடந்துவிட்டது.

ஏற்கனவே மின்சாரம் தீர்ந்ததால் கார்பன்-டை-ஆக்ஸைடை வெளியேற்றும் கருவிகள் செயலிழந்திருக்கக்கூடிய நிலையில், இனி நீர்மூழ்கியில் கார்பன் அளவு அதிகரித்து அதில் பயணிப்பவர்கள் ஆழ்ந்த மயக்க நிலைக்கு சென்று உயிரிழக்கக்கூடும் என நிபுணர்கள் தெரிவிக்கின்றனர்.

கடந்த ஞாயிற்றுக்கிழமை, கட்டுப்பாடு அறையுடனான தொடர்பை இழந்து கடலுக்கடியில் மாயமான அந்த நீர்மூழ்கியை அமெரிக்கா மற்றும் கனடா நாட்டு கடலோர காவல்படையினர் 4 நாட்களாக இரவு பகலாகத் தேடிவருகின்றனர்.