தமிழகத்தில் உள்ள கடலோர மாவட்டங்களில் அடுத்த 5 நாட்களுக்கு மிதமான முதல் கன மழை பெய்ய வாய்ப்பு

சென்னை: அடுத்த 5 நாட்கள் மழை .... இந்திய பெருங்கடலில் ஏற்பட்ட காற்றழுத்து தாழ்வு தற்போது மணிக்கு 13 கிலோமீட்டர் வேகத்தில் நகர்ந்து வருவதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.

சமீபத்தில் இந்திய பெருங்கடலின் வடக்கு மற்றும் வடமேற்கு பகுதியில் புதிய காற்றழுத்த தாழ்வு மண்டலம் தோன்றியது என்பதும் இதன் காரணமாக தமிழகத்தில் சென்னை உள்பட 11 மாவட்டங்களில் பிப்ரவரி ஒன்றாம் தேதி முதல் மழை பெய்யும் என கூறப்பட்டிருந்தது.

இந்நிலையில் தற்போது காற்றழுத்த தாழ்வு மண்டலம் திரிகோணமலைக்கு 455 கிலோ மீட்டர் தொலைவில் நிலை கொண்டுள்ளது எனவும் இந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் மணிக்கு 13 கிலோமீட்டர் வேகத்தில் நகர்ந்து கொண்டிருப்பதாகவும் தகவல் தெரிவித்துள்ளது.

எனவே இதன் காரணமாக தமிழகத்தில் உள்ள கடலோர மாவட்டங்களில் அடுத்த 5 நாட்களுக்கு மிதமான மழை முதல் கன மழை வரையும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் தூத்துக்குடி மற்றும் சென்னை எண்ணூர் துறைமுகங்களில் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.