ஆசிரியர் தினத்தை முன்னிட்டு பிரதமர் மோடி வாழ்த்து செய்தி

ஆசிரியர் தினத்தை முன்னிட்டு பிரதமர் நரேந்திர மோடி தனது ட்விட்டர் பக்கத்தில் வாழ்த்து தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் தனது டுவிட்டர் பக்கத்தில், மனதை ஒருமுகப்படுத்துவதிலும், நாட்டை கட்டமைப்பதிலும் ஆசிரியர்களின் பணி அளப்பரியது. கடினமாக உழைக்கும் ஆசிரியர்களின் கட்டமைப்புக்கு நாம் நன்றி உள்ளவர்களாக இருப்போம் என்று கூறியுள்ளார்.

சமீபத்தில் மன் கி பாத் நிகழ்ச்சியில் பேசிய மோடி, கொரோனா காலகட்டத்தில் ஆசிரியர்கள் பெரிய போராட்டத்தை எதிர்கொண்டு மாணவர்களுக்கு கற்பிக்கின்றனர் என்று கூறினார். மன் கி பாத் நிகழ்ச்சியில் பேசிய உரையின் கிளிப்பை தற்போது #OurTeachersOurHeroes, மோடி ட்வீட் செய்து வெளியிட்டுள்ளார்.

முன்னாள் ஜனாதிபதி எஸ்.ராதாகிருஷ்ணனின் பிறந்த நாள் விழா, ஆசிரியர் தினமாக கொண்டாடப்படுகின்றது, இந்நிலையில் பிரதமர் மோடி .ராதாகிருஷ்ணனின் பிறந்த நாள் விழாவில் அவருக்கு அஞ்சலி செலுத்தினார். மேலும் அவர் கடின உழைப்பாளி மனதை வடிவமைப்பதற்கும், நம் தேசத்தைக் கட்டியெழுப்புவதற்கும் ஆசிரியர்கள்செய்த பங்களிப்புகளுக்கு நாம் நன்றியுள்ளவர்களாக இருப்போம் என தெரிவித்துள்ளார்.

மேலும் அவர், இந்த ஆசிரியர் தினத்தன்று, நமது ஆசிரியர்களின் குறிப்பிடத்தக்க முயற்சிகளுக்கு நாம் நன்றியைத் தெரிவிக்க வேண்டும். டாக்டர் எஸ்.ராதாகிருஷ்ணனுக்கு அஞ்சலி செலுத்துகிறோம். எங்கள் ஆசிரியர்கள் எங்கள் ஹீரோஸுக்கு ஜெயந்தி என்று தெரிவித்துள்ளார்.