கொரோனா சோதனைக்கு கூடுதல் இடங்களை திறக்க பரிசீலனை

சுகாதார ஆணையம் பரிசீலனை... கொரோனா வைரஸ் தொற்று பரவல் தீவிரமடைந்துள்ள நிலையில், டிரைவ்-த்ரு கொவிட்-19 சோதனைக்கு கூடுதல் இடங்களைத் திறப்பதற்கு சஸ்காட்செவன் சுகாதார ஆணையம் பரிசீலித்து வருகிறது.

நேற்று (வியாழக்கிழமை) வெளியிடப்பட்ட புதிய கணிப்புகள், டிசம்பர் நடுப்பகுதியில் புதிய கொவிட்-19 தொற்றுகளின் எண்ணிக்கை ஒரு நாளைக்கு 560ஐ எட்டக்கூடும் என்று கூறுகின்றன. இதன் பின்னணியில் இந்த நடவடிக்கை எடுக்கப்படவுள்ளது.

பிரின்ஸ் அல்பர்ட், ரெஜினா, சாஸ்கடூன் மற்றும் யார்க்க்டன் ஆகிய இடங்களில் அமைந்துள்ள சோதனை மையங்கள், வைரஸின் சமூக பரவுதலின் சமீபத்திய அதிகரிப்பு காரணமாக ஏற்கனவே சிக்கலில் உள்ளன.

அதன் முதல் நாள் செயற்பாட்டில், பிரின்ஸ் அல்பர்ட் மையம் மாலை 4 மணிக்கு திட்டமிடப்பட்ட இறுதி நேரத்திற்கு இரண்டு மணி நேரத்திற்கு முன்னர் மக்களைத் திருப்பி விட வேண்டியிருந்தது.