அமேசான் நிறுவனத்தை சேர்ந்த 20 ஆயிரம் பேருக்கு கொரோனா பாதிப்பு

20 ஆயிரம் பேருக்கு கொரோனா... மின்னணு வணிகத்தில் முன்னணியில் திகழும் அமேசான் நிறுவனம், தங்கள் நிறுவனத்தைச் சேர்ந்த ஏறக்குறைய இருபதாயிரம் பேருக்கு கொரோனா வைரஸ் (கொவிட்-19) தொற்று இருப்பதனை உறுதி செய்துள்ளது.

வைரஸ் தொற்றினால் 19,816 ஊழியர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். இது மொத்த முன்னணி வரிசை ஊழியர்களில் 1.44 சதவீதம் என அமேசான் குறிப்பிட்டுள்ளது. பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை, முன்னணி வரிசை ஊழியர்களில் 1.44 சதவீதம் என அமேசான் குறிப்பிட்டுள்ளது.

தொழிலாளர்கள், அரசாங்கங்கள் மற்றும் அமேசான் முதலீட்டாளர்களிடமிருந்து வெளிப்படைத்தன்மை அதிகரிப்பதற்கான பல மாத கோரிக்கைகளுக்குப் பிறகு இந்த அறிவிப்பினை அமேசான் வெளியிட்டுள்ளது.

அமேசான் தனது கிடங்குகளில் உடல் ரீதியான விலகல் இல்லாததால் விமர்சனங்களை எதிர்கொண்டது. ஒவ்வொரு இரண்டு வாரங்களுக்கும் அதன் ஊழியர்கள் மீது சோதனைகளை நடத்த திட்டமிட்டுள்ளதாக நிறுவனம் கூறுகிறது.