இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 34,956 பேருக்கு கொரோனா பாதிப்பு

இந்தியாவில் கொரோனா வைரஸ் தாக்கம் அதிகரித்து கொண்டே செல்கிறது. ஊரடங்கு கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டிருப்பதாலும், பரிசோதனைகளை அதிகரிப்பதாலும் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை அதிகரித்துள்ளது. இருப்பினும் கொரோனாவிலிருந்து குணமடைந்தோரின் எண்ணிக்கையும் அதிகரித்து கொண்டே வருவது சற்று ஆறுதலடைய செய்துள்ளது.

இன்று காலை மத்திய சுகாதாரத்துறை வெளியிட்ட தகவலில், இந்தியாவில் கொரோனா பாதிப்பு 10 லட்சத்தைக் கடந்துள்ளது. மொத்தம் 10,03,832 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதுவரை இல்லாத அளவில் கடந்த 24 மணி நேரத்தில் 34,956 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த 24 மணி நேரத்தில் 687 பேர் மரணம் அடைந்துள்ளனர். இதனால் இந்தியாவில் கொரோனா வைரசால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 25,602 ஆக உயர்ந்துள்ளது. இதனால் உயரிழப்பு விகிதம் 2.5 சதவீதமாக உள்ளது. இந்தியாவில் இதுவரை 6,35,757 பேர் கொரோனா பாதிப்பில் இருந்து குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.

இந்தியாவில் குணமடையும் விகிதம் 63.3 சதவீதமாக உள்ளது. நாடு முழுவதும் 3,42,473 பேர் பல்வேறு மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். நாட்டிலே கொரோனா அதிகம் பாதித்த மாநிலமாக மகாராஷ்டிரா மாநிலம் முதலிடத்தில் உள்ளது.