கனடாவில் ஒரே நாளில் 6307 பேருக்கு கொரோனா பாதிப்பு

ஒரே நாளில் 6307 பேருக்கு கொரோனா... கனடாவில் கொரோனா வைரஸ் (கொவிட்-19) தொற்றினால், கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் ஆறாயிரத்து 307பேர் பாதிக்கப்பட்டதோடு, 114பேர் உயிரிழந்துள்ளனர்.

கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்ட 29ஆவது நாடாக விளங்கும் கனடாவில், மூன்று இலட்சத்து 89ஆயிரத்து 775பேர் வைரஸ் தொற்றினால் பாதிக்கப்பட்டுள்ளனர். மேலும், 12ஆயிரத்து 325பேர் உயிரிழந்துள்ளனர்.

மேலும், 67ஆயிரத்து 564பேர் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதில் 530பேரின் நிலை மிகவும் கவலைக்கிடமாக இருப்பதாக மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

அத்துடன் மூன்று இலட்சத்து 9ஆயிரத்து 886பேர் வைரஸ் தொற்றிலிருந்து மீண்டு வீடு திரும்பியுள்ளனர். பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ள நிலையில் கனடாவில் கொரோனா பாதிப்பு அதிகரித்துக் கொண்டே வருகிறது.

கடந்த மாதத்தில் குறைந்திருந்த பாதிப்பு எண்ணிக்கை தற்போது உயர்ந்து வருகிறது. இதனால் மக்கள் மத்தியில் அச்சம் ஏற்பட்டுள்ளது.