வரும் 1ம் தேதி முதல் சீனா உட்பட 5 நாடுகளில் இருந்து வருபவர்களுக்கு கொரோனா சான்றிதழ் அவசியம்

புதுடெல்லி: கொரோனா சான்றிதழ் வேண்டும்... ஜனவரி 1ம் தேதி முதல், சீனா உள்ளிட்ட 5 நாடுகளில் இருந்து வருபவர்கள், கொரோனா வைரஸ் தொற்று இல்லை என்ற சான்றிதழை சமர்ப்பிக்குமாறு மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் கேட்டுக் கொண்டுள்ளது.

துறை அமைச்சர் மன்சுக் மாண்டவியா தெரிவித்தார். இதுகுறித்து அவர் மேலும் கூறியதாவது: ஜனவரி 1-ம் தேதி முதல் சீனா, ஹாங்காங், ஜப்பான், தென்கொரியா, சிங்கப்பூர், மலேசியா ஆகிய நாடுகளில் இருந்து இந்தியாவுக்கு வருபவர்கள் தங்கள் பயணத்திற்கு 72 மணி நேரத்திற்கு முன்னதாக கொரோனா பரிசோதனை செய்து கொள்ள வேண்டும்.

சான்றிதழை இந்தியாவிற்கு வரும் பயணிகள் புறப்படும் முன் AirSuvita இணையதளத்தில் பதிவேற்றம் செய்ய வேண்டும். நாட்டில் கொரோனா பரவலை தடுக்க பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன.


முக கவசம் அணிவது, கைகளை கழுவுவது போன்ற கொரோனா தடுப்பு விதிகளை மக்கள் பின்பற்ற வேண்டும் என்று வானொலி நிகழ்ச்சியின் மூலம் மக்களுக்கு பிரதமர் மோடி வேண்டுகோள் விடுத்துள்ளார். கொரோனா பரவலை தடுக்க மத்திய அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.