காஞ்சிபுரம் மாவட்டத்தில் மேலும் 315 பேருக்கு கொரோனா உறுதி

காஞ்சிபுரம் மாவட்டத்தில் ஏற்கனவே 4,739 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்ட நிலையில் மேலும் 315 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது.

தமிழகத்தில் கொரோனா வைரஸ் பரவியவர்களின் மொத்த எண்ணிக்கை 1 லட்சத்து 70 ஆயிரத்து 693 ஆக அதிகரித்துள்ளது. நோய் தொற்று உறுதி செய்யப்பட்டவர்களில் 50 ஆயிரத்து 294 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். கொரோனா வைரஸ் தாக்குதலுக்கு தமிழகத்தில் கொரோனாவுக்கு பலியானோர் எண்ணிக்கை 2,481 ஆக உயர்ந்துள்ளது.

அதிகபட்சமாக சென்னையில் கொரோனாவால் பாதிப்பு அடைந்தோர் எண்ணிக்கை 85,859 ஆக அதிகரித்துள்ளது. சென்னையை தொடர்ந்து செங்கல்பட்டு, திருவள்ளூர், மதுரை, காஞ்சிபுரம், திருவண்ணாமலை, வேலூர் உள்ளிட்ட மாவட்டங்களில் கொரோனா பாதிப்பு அதிகரித்த வண்ணம் உள்ளது.

இந்நிலையில் காஞ்சிபுரம் மாவட்டத்தில் ஏற்கனவே 4,739 பேருக்கு தொற்று கண்டறியப்பட்ட நிலையில் மேலும் 315 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 5,054 ஆக உயர்ந்துள்ளது. இதுவரை 2,543 பேர் கொரோனாவில் இருந்து குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். 66 பேர் உயிரிழந்துள்ளனர்.

காஞ்சிபுரம் மாவட்டத்தில் நாளுக்கு நாள் கொரோனா வைரஸ் பரவல் அதிகமாகவே காணப்படுகிறது. இதை கட்டுக்குள் கொண்டு வர மாவட்ட நிர்வாகம் பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொண்டு வருகிறது.