வேலூர் மாவட்டத்தில் புதிதாக 148 பேருக்கு கொரோனா உறுதி

வேலூர் மாவட்டத்தில் ஏற்கனவே 12,234 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்ட நிலையில் புதிதாக 148 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது.

தமிழகத்தில் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கையும் உயர்ந்த வண்ணம் உள்ளது. இருப்பினும் குணமடைவோரின் எண்ணிக்கையும் கணிசமாக உயர்ந்துள்ளது. தமிழகத்தில் நேற்று புதிதாக 5 ஆயிரத்து 528 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் மாநிலத்தில் கொரோனா உறுதி செய்யப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 4 லட்சத்து 86 ஆயிரத்து 052 ஆக அதிகரித்துள்ளது.

தமிழகத்தில் கொரோனாவில் இருந்து குணமடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 4 லட்சத்து 29 ஆயிரத்து 416 ஆக உயர்ந்துள்ளது. ஆனாலும் வைரஸ் தாக்குதலுக்கு பலியானோர் எண்ணிக்கை 8 ஆயிரத்து 154 ஆக அதிகரித்துள்ளது.

மற்ற மாவட்டங்களை விட சென்னையில் தான் கொரோனாவால் பாதிக்கப்படுவர்களின் எண்ணிக்கை உயர்ந்து கொண்டே செல்கிறது. சென்னையை தொடர்ந்து தென் மாவட்டங்களில் கொரோனா வைரஸ் தொற்று வேகமாக பரவி வருகிறது.

இந்நிலையில் வேலூர் மாவட்டத்தில் ஏற்கனவே 12,234 பேருக்கு தொற்று கண்டறியப்பட்ட நிலையில் புதிதாக 148 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 12,382 ஆக உயர்ந்துள்ளது. இதுவரை 11,022 பேர் கொரோனாவில் இருந்து குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். 186 பேர் உயிரிழந்துள்ளனர்.