கோவை மாவட்டத்தில் 4 போலீசாருக்கு கொரோனா தொற்று உறுதி

தமிழகத்திலே கொரோனா பரவல் அதிகளவில் கட்டுப்படுத்தப்பட்டுள்ளது. அனைத்து மாவட்டங்களிலும் தற்போது கொரோனா தொற்று குறைந்து வருகிறது. சுகாதாரத்துறை சார்பில் நேற்று வெளியிடப்பட்ட பட்டியலில் கோவையை சேர்ந்த 146 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு உள்ளது.

இதனால் கோவை மாவட்டத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 48 ஆயிரத்து 725 ஆக உயர்ந்து உள்ளது. கோவை அரசு ஆஸ்பத்திரியில் கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று வந்த 70 வயது முதியவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இதன்மூலம் கோவையில் கொரோனாவுக்கு பலியானவர்களின் எண்ணிக்கை 613 ஆக அதிகரித்து உள்ளது.

அரசு மருத்துவமனைகள், தனியார் மருத்துவமனைகள், கொரோனா சிகிச்சை மையங்களில் சிகிச்சை பெற்று வந்த 132 பேர் குணமடைந்து நேற்று வீடு திரும்பினர். கோவையில் இதுவரையில் 47 ஆயிரத்து 173 பேர் கொரோனாவில் இருந்து குணமடைந்துள்ளனர். தற்போது 939 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இந்த நிலையில், கோவை சரவணம்பட்டி போலீஸ் நிலையத்தில் பணியாற்றி வரும் பெண் போலீஸ் உள்பட 4 போலீசாருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டு உள்ளது.