இந்தியாவில் 9000 – ஐ கடந்த கொரோனா தொற்று

இந்தியா: இந்தியாவில் கடந்த ஒரு மாதமாகவே கொரோனா வைரஸ் பரவல் தொடர்ந்து அதிகரித்து கொண்டு வருகிறது. எனவே இதனை தடுக்கும் நடவடிக்கையாக மீண்டும் கட்டுப்பாடுகளை பின்பற்ற அரசு அறிவுறுத்தி கொண்டு வருகிறது.

இந்நிலையில் மத்திய சுகாதாரத்துறை தினந்தோறும் கொரோனா பாதிப்பு நிலவரத்தை வெளியிட்டு வருகிறது.அந்த வகையில் கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 9,355 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.


அதனைத் தொடர்ந்து கொரோனாவால் பாதிக்கப்பட்ட 26 பேர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளனர். இதனையடுத்து உயிரிழந்தோர் எண்ணிக்கை மட்டும் 5,31,42 ஆக அதிகரித்துள்ளது.

மேலும் 57, 410 பேர் கொரோனா தொற்றுக்கு சிகிச்சை பெற்று வருகின்றனர். தற்போது கொரோனா சிகிச்சை பெற்று வருபவர்களின் எண்ணிக்கை 0.13 சதவீதமாக குறைந்துள்ளது. இந்நிலையில் கொரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கையாக இதுவரை 220. 66 கோடி தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளது இதில் கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 4,358 பேருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது .