விழுப்புரம் மாவட்டத்தில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 12,372-ஆக உயர்வு

விழுப்புரம் மாவட்டத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 12,372-ஆக உயர்ந்துள்ளது.

தமிழகத்தில் பரவி வரும் கொரோனா வைரஸ் தாக்குதலுக்கு இதுவரை மொத்தம் 6 லட்சத்து 40 ஆயிரத்து 943 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். நோய் தொற்று பாதிக்கப்பட்டவர்களில் 44 ஆயிரத்து 437 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். வைரஸ் பாதிக்கப்பட்டவர்களில் சிகிச்சைக்கு பின் 5 லட்சத்து 86 ஆயிரத்து 454 பேர் குணமடைந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்ட்டுள்ளனர். ஆனாலும் தமிழகத்தில் கொரோனாவுக்கு பலியானோர் எண்ணிக்கை 10 ஆயிரத்து 52 ஆக அதிகரித்துள்ளது.

மற்ற மாவட்டங்களை விட சென்னையில் தான் கொரோனாவால் பாதிக்கப்படுவர்களின் எண்ணிக்கை உயர்ந்து கொண்டே செல்கிறது.

விழுப்புரம் மாவட்டத்தில் கொரோனா வைரசால் நேற்றுவரை பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 12,311-ஆக இருந்தது. அவர்களில் 11,704 பேர் சிகிச்சை பெற்று குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். தற்போது மருத்துவமனையில் 507 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். ஆனாலும் கொரோனாவுக்கு இதுவரை 100 பேர் உயிரிழந்துள்ளனர்.

இந்தநிலையில் விழுப்புரம் மாவட்டத்தில் இன்று புதிதாக 61 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது. இதனால் மாவட்டத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 12,372-ஆக உயர்ந்துள்ளது.