விழுப்புரம் மாவட்டத்தில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 8,230 ஆக உயர்வு

விழுப்புரம் மாவட்டத்தில் இன்று 111 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளதால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 8,230-ஆக உயர்ந்துள்ளது.

தமிழகத்தில் வேகமாக பரவி வரும் கொரோனாவால் பாதிக்கப்படுவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்த வண்ணம் உள்ளது. தமிழகத்தில் நேற்று புதிதாக 5,976 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதனால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 4,51,827 ஆக உயர்ந்துள்ளது. தற்போது மருத்துவமனையில் 51,633 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதுவரை 3,92,507 பேர் பாதிப்பிலிருந்து குணமடைந்துள்ளனர். ஆனாலும் இதுவரை 7,687 பேர் உயிரிழந்துள்ளனர்.

மற்ற மாவட்டங்களை விட சென்னை, செங்கல்பட்டு, கோவை, கடலூர், திருவள்ளூர், திருவண்ணாமலை, விழுப்புரம் மாவட்டங்களில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை நேற்று அதிகமாக உள்ளது.

விழுப்புரம் மாவட்டத்தில் நேற்றுவரை பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 8,119-ஆக இருந்தது. சிகிச்சை பெற்று வந்தவர்களில் 6,954 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். தற்போது மருத்துவமனையில் 1,088 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். கொரோனாவுக்கு இதுவரை 77 பேர் உயிரிழந்துள்ளனர். இந்தநிலையில் விழுப்புரம் மாவட்டத்தில் இன்று 111 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது. இதனால் மாவட்டத்தில் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 8,230-ஆக உயர்ந்துள்ளது.