சமூக இடைவெளி பின்பற்றாத இளைஞர்களால் கொரோனா பரவுகிறது; சுகாதாரத்துறை அதிகாரிகள் தகவல்

கொரோனா பரவலுக்கு காரணம இளைஞர்கள்தான் என்று சுகாதாரத்துறை அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.

ஒட்டாவாவில் கொரோனா நோய்த்தொற்றுக்கு ஆளானவர்களில் 44 சதவிகிதத்தினர் 30 வயதுக்கு கீழ் உள்ளவர்கள்தான். கடந்த இரண்டு நாட்களாக தொடர்ந்து ஒட்டாவாவில் புதிதாக கொரோனா தொற்றுக்கு ஆளாவோரின் எண்ணிக்கை இரண்டு இலக்கத்திலேயே உள்ள நிலையில், அதில் பாதி பிரச்சினைக்கு காரணம் இளைஞர்கள்தான் என்கிறார்கள் சுகாதாரத்துறை அதிகாரிகள்.

நேற்று 16 பேருக்கு புதிதாக கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில் கடந்த சனிக்கிழமை கொரோனா தொற்றுக்கு ஆளானோரின் எண்ணிக்கை 19.

ஒட்டாவாவைப் பொருத்தவரை கொரோனா அனைத்து வயதினரையும் பாரபட்சமின்றி பாதித்துவரும் நிலையில், சமீபத்தில் கொரோனா தொற்றுக்கு ஆளானவர்களில் பத்தில் நான்கு பேர் 30 வயதுக்கு கீழ் உள்ளவர்கள் என்கிறார் ஒட்டாவாவின் தலைமை மருத்துவ அலுவலரான டாக்டர் வேரா எட்சஸ்.

இளைஞர்கள் வெளியே செல்லும்போது, நமது சமூக வளையத்துக்குள் இல்லாத நண்பர்களை சந்திக்கும்போது இரண்டு மீட்டர் இடைவெளியை கடைப்பிடிப்பது அவசியம் என்கிறார் அவர்.