தூத்துக்குடி மாவட்டத்தில் சிறப்பு முகாம்களில் 41 ஆயிரம் பேருக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டது

தூத்துக்குடி : தூத்துக்குடி மாவட்டத்தில் ஞாயிற்றுக்கிழமை நடந்த கொரோனா தடுப்பூசி முகாமில் 41 ஆயிரத்து 305 பேர் கொரோனா தடுப்பூசி செலுத்திக் கொண்டனர். கொரோனா தொற்று பரவலை முழுமையாக கட்டுப்படுத்த அனைவருக்கும் தடுப்பூசி செலுத்துவதற்கான பல நடவடிக்கையை அரசு எடுத்து கொண்டு வருகிறது.

எனவே அதன்படி மாநிலம் முழுவதும் கொரோனா தடுப்பூசி முகாம்கள் நடத்தப்பட்டு வருகின்றன. நேற்று தமிழகம் முழுவதும் 35-வது கட்ட கொரோனா தடுப்பூசி முகாம் நடத்தப்பட்டது. தூத்துக்குடி சுகாதார மாவட்டத்தில் 563 இடங்களிலும், கோவில்பட்டி சுகாதார மாவட்டத்தில் 349 இடங்கள் ஆக மொத்தம் மாவட்டம் முழுவதும் 912 இடங்களில் இந்த சிறப்பு முகாம் நடந்தது.

இதை அடுத்து இது தவிர மருத்துவ பணியாளர்கள் வீடு வீடாக சென்றும் விடுபட்டவர்களுக்கு கொரோனா தடுப்பூசி போட்டனர். இம்முகாம்களில் 12 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு முதல் மற்றும் 2-வது தவணை தடுப்பூசி போடப்பட்டது.

மேலும் நாட்டின் 75-வது சுதந்திர தினத்தை முன்னிட்டு 18 வயதுக்கு மேற்பட்ட அனைவருக்கும் பூஸ்டர் டோஸ் தடுப்பூசியை 75 நாட்களுக்கு (செப்டம்பர் 30 வரை) இலவசமாக போட மத்திய அரசு அறிவுறுத்தி உள்ளது. எனவே அதன்படி அனைத்து மையங்களிலும் பூஸ்டர் டோஸ் இலவசமாக போடப்பட்டது. 2-வது தவணை தடுப்பூசி செலுத்தி 6 மாதங்கள் நிறைவடைந்தவர்கள் பூஸ்டர் டோஸ் தடுப்பூசியை இலவசமாக போட்டுக் கொண்டனர்.