சீனாவில் மீண்டும் கொரோனா வைரஸ் பாதிப்பு உயர்வு .. ஊரடங்கு அமல்

சீனா: கொரோனா உயர்வு ஊரடங்கு அமல் ..... கடந்த 2019 ஆம் ஆண்டு சீனாவின் உஹான் மாநிலத்தில் இருந்து பரவத் தொடங்கிய கொரோனா வைரஸ் தொற்று தற்போது வரை அந்த நாட்டில் பாதிப்புகளை ஏற்படுத்தி வருகிறது.

இடையில் கட்டுப்பாடு ஊரடங்கு தடுப்பூசி ஆகியவற்றின் விளைவாக குறைந்த கொரோனா தொற்று பாதிப்பு தற்போது மீண்டும் உயர்ந்துள்ளது.இதனை அடுத்து தற்போது நாளொன்றுக்கு 30 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் கொரோனா தொற்றுக்கு ஆளாகி வருகின்றனர்.


இதனை அடுத்து நேற்று வரை 3,7,802 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் வந்துள்ளது. இந்த பாதிப்பு எண்ணிக்கை உயர்வு சீன மக்களிடையே பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. அதனால் தடுப்பு நடவடிக்கையாக ஜியாங் மாகாணத்தின் முக்கிய பகுதிகளில் அரசு ஊரடங்கை அறிவித்துள்ளது.

கிட்டத்தட்ட 100 நாட்களுக்கும் மேலாக அப்பகுதியில் ஊரடங்கு அமலில் உள்ளது. இதனால் ஜியாங் மாகாணத்தில் மக்கள் வீட்டை விட்டு வெளியேறாத நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர். இந்த நேரத்தில் அப்பகுதியில் உள்ள குடியிருப்பு பகுதி ஒன்றில் திடீர் என்று தீ விபத்து ஏற்பட்டுள்ளது.

தற்போது ஊரடங்கு அமலில் உள்ளதால் மீட்பு பணிகள் தாமதம் ஆனது. இதனால் கோபமடைந்த பொது மக்கள் ஊரடங்கை கண்டித்து மக்கள் பெரும் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.