தமிழகத்தில் இறங்குமுகத்துக்கு வந்த கொரோனா பாதிப்பு

தமிழகத்தில் கடந்த ஜூன் 28-ந்தேதி அன்று நிலவரப்படி 3,940 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டிருந்தனர். அதன்பின்னர் மாநிலத்தில் கொரோனா பாதிப்பு தொடர்ந்து ஏறுமுகத்தில் இருந்தது. 4 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் தினமும் பாதிக்கப்பட்டு வந்தனர். இந்தநிலையில் 8 நாட்களுக்கு பின்னர் கொரோனா பாதிப்பு இறங்குமுகத்துக்கு வந்துள்ளது.

மாநிலத்தில் நேற்றைய கொரோனா பாதிப்பு நிலவரம் குறித்து சுகாதாரத்துறை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டிருப்பதாவது:-

தமிழகத்தில் 33 ஆயிரத்து 518 பேருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டது. இதில் 3 ஆயிரத்து 827 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது. வெளிநாடுகளில் இருந்து வந்த 10 பேரும், வெளிமாநிலங்களில் இருந்து வந்த 34 பேரும் பாதிப்புக்கு உள்ளாகி உள்ளனர். தமிழத்தில் நேற்று அனைத்து மாவட்டங்களிலும் புதிதாக கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டவர்கள் கண்டறியப்படுள்ளனர். தற்போது தமிழகத்தில் கொரோனா பாதிப்பு 1 லட்சத்து 14 ஆயிரத்து 978 ஆக உயர்ந்துள்ளது.

தமிழகத்தில் கொரோனா உயிரிழப்பு 1,571 ஆக அதிகரித்துள்ளது. கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று வந்தவர்களில் அரசு மருத்துவமனையில் 46 பேரும், தனியார் மருத்துவமனையில் 15 பேர் என மொத்தம் 61 பேர் நேற்று உயிரிழந்தனர். 11 மாவட்டங்களில் உயிரிழப்பு ஏற்பட்டுள்ளது. இதன் விபரம் வருமாறு:-
சென்னை - 30
செங்கல்பட்டு - 8
மதுரை - 7
திருவள்ளூர் - 5
திருவண்ணாமலை - 3
காஞ்சீபுரம் - 3
விருதுநகர் - 1
ராமநாதபுரம் - 1
திருச்சி - 1
விழுப்புரம் - 1
தூத்துக்குடி - 1

தமிழகத்தில் கொரோனாவில் இருந்து 3 ஆயிரத்து 793 பேர் நேற்று குணம் அடைந்தனர். இதுவரை 66 ஆயிரத்து 571 பேர் குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர். 46 ஆயிரத்து 833 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.