தமிழகத்தில் கொரோனா வைரஸ் பாதிப்பு 1 லட்சத்தை கடந்தது - மாவட்ட வாரியாக முழு தகவல்

தமிழகத்தில் கொரோனா வைரஸ் நோய் தொற்று அதிதீவிரமாக பரவி வருகிறது. கடந்த சில நாட்களாக பாதிப்பு உச்சகட்டத்தை நோக்கி வந்து கொண்டிருகிறது. நேற்று மட்டும் மாநிலத்தில் புதிதாக 4 ஆயிரத்து 329 பேருக்கு வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் மாநிலத்தில் கொரோனா பரவியவர்களின் மொத்த எண்ணிக்கை 1 லட்சத்து 2 ஆயிரத்து 721 ஆக அதிகரித்துள்ளது. இதில் வெளிநாடுகள் மற்றும் வெளிமாநிலங்களில் இருந்து வந்த 1,178 பேர் அடங்குவர்.

நோய் தொற்று பாதிக்கப்பட்டவர்களில் 42 ஆயிரத்து 955 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதில் பலர் வீடுகளில் தனிமைப்படுத்தப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். மேலும், கொரோனா பாதிப்பில் இருந்து 58 ஆயிரத்து 378 பேர் குணமடைந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர். ஆனாலும், கொரோனா தாக்குதலுக்கு தமிழகத்தில் இதுவரை 1,385 பேர் உயிரிழந்துள்ளனர்.

மாவட்ட வாரியாக கொரோனா பரவியவர்களின் மொத்த எண்ணிக்கை:-
அரியலூர் - 463
செங்கல்பட்டு - 6,139
சென்னை - 64,689
கோவை - 645
கடலூர் - 1,143
தர்மபுரி - 107
திண்டுக்கல் - 618
ஈரோடு - 206
கள்ளக்குறிச்சி - 1,102
காஞ்சிபுரம் - 2,272
கன்னியாகுமரி - 489
கரூர் - 153
கிருஷ்ணகிரி - 170
மதுரை - 3,423
நாகை - 273
நாமக்கல் - 101
நீலகிரி - 119
பெரம்பலூர் - 164
புதுக்கோட்டை - 252
ராமநாதபுரம் - 1,143
ராணிப்பேட்டை - 978
சேலம் - 1,127
சிவகங்கை - 376
தென்காசி - 391
தஞ்சாவூர் - 478
தேனி - 927
திருப்பத்தூர் - 216
திருவள்ளூர் - 4,343
திருவண்ணாமலை - 2,181
திருவாரூர் - 513
தூத்துக்குடி - 1,055
திருநெல்வேலி - 921
திருப்பூர் - 197
திருச்சி - 803
வேலூர் - 1,667
விழுப்புரம் - 1,020
விருதுநகர் - 679