இன்று முதல் எம்.பி.பி.எஸ், பி.டி.எஸ் உள்ளிட்ட இளநிலை மருத்துவப் படிப்புகளுக்கான கலந்தாய்வு தொடக்கம்

சென்னை: மருத்துவக் கல்வி இயக்குனரகம், சிறப்புப் பிரிவினருக்கும், பொதுப் பிரிவினருக்கும் ஒரே நேரத்தில் கலந்தாய்வை புதன்கிழமையான இன்று தொடங்க உள்ளதாக முன்னதாக தெரிவித்தது. எனவே அதன் படி, இன்று முதல் எம்.பி.பி.எஸ், பி.டி.எஸ் உள்ளிட்ட இளநிலை மருத்துவப் படிப்புகளுக்கான கலந்தாய்வு தொடங்க உள்ளது.

இதையடுத்து இந்த ஆண்டு, 22,736 விண்ணப்பதாரர்கள் விண்ணப்பித்திருந்தனர், அதில் 8,029 ஆண்கள் மற்றும் 14,024 பெண்கள் உட்பட 22,054 விண்ணப்பங்கள் தகுதி பெற்றுள்ளனர். 2021-22 உடன் ஒப்பிடும்போது இந்த ஆண்டு குறைவான விண்ணப்பங்களே பெறப்பட்டுள்ளன. அதாவது 2021-22 ஆம் ஆண்டு 24,951 விண்ணப்பங்களும், 2020-2021 ஆம் ஆண்டு 23,971 விண்ணப்பங்கள் பெறப்பட்டன.

அதைத்தொடர்ந்து சிறப்பு பிரிவு கலந்தாய்வு ஓமந்தூரார் அரசு மருத்துவமனையில் நேரடியாகவும் பொது கலந்தாய்வு ஆன்லைன் வழியாகவும் நடைபெற உள்ளது. ஆன்லைன் வழியாக பொது கலந்தாய்வு 25-ம் தேதி வரை நடைபெற உள்ளது என்று அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் விண்ணப்பதாரர்களுக்கான சான்றிதழ் சரிபார்ப்பு அக்., 27 மற்றும் 28 ஆகிய தேதிகளில் நடைபெறும். முதல்நிலை தேர்வு முடிவுகள் அக்., 30ல் வெளியிடப்படும். ] இட ஒதுக்கீடு பெற்றவர்கள், நவம்பர் 4ம் தேதிக்குள், அந்தந்த கல்லுாரிகளில் சேர வேண்டும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.