தமிழகத்தில் ஆவின் பால் விற்பனை வழக்கத்தை விட 5% குறைவு

சென்னை: ஆவின் பால் விற்பனை குறைவு ..... தமிழகத்தில் உயர்ந்து வரும் பணவீக்கம் காரணமாக அத்தியாவசிய பொருட்களின் விலை உயர்ந்து கொண்டே வருகிறது. அந்த வகையில் இடுபொருட்கள் விலையேற்றம், உற்பத்தி செலவினம் ஆகியவற்றின் காரணமாக பால் கொள்முதல் விலை உயர்த்தப்பட வேண்டும் என்று பால் உற்பத்தியாளர்கள் தொடர்ந்து கோரிக்கை வைத்து வந்தனர்.

எனவே அதன்படி பசும் பால் கொள்முதல் விலை ஒரு லிட்டருக்கு ரூ.32 லிருந்து ரூ.35 ஆகவும், இதே போன்று எருமை பால் லிட்டருக்கு ரூ.41 லிருந்து ரூ.44 ஆகவும் உயர்த்தி வழங்கப்படும் என அரசு அறிவிப்பை வெளியிட்டது.

இந்த விலை உயர்வின் காரணமாக விற்பனை விலையும் தற்போது உயர்த்தப்பட்டுள்ளது. அதன்படி ஆவின் பால் விலையை லிட்டருக்கு ரூ.12 உயர்த்தப்படுவதாக ஆவின் நிறுவனம் அறிவித்துள்ளது. அதாவது கொழுப்பு நிறைந்த ஆரஞ்ச் நிற பால் பாக்கெட் விலை அரை லிட்டருக்கு ரூ.24 இருந்து ரூ.30 ஆக விற்பனையாகிறது. இதே போநூர் ஒரு லிட்டர் ஆவின் பால் பாக்கெட் ரூ.60 ஆக விற்பனை செய்யப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதையடுத்து இந்த விலை உயர்வு இன்று முதல் அமலுக்கு கொண்டு வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆனால் சமன்படுத்தப்பட்ட பால் நீல நிற பால் பாக்கெட், நிலைப்படுத்தப்பட்ட பால் பச்சை நிற பால் பாக்கெட் போன்றவற்றின் விலையில் எந்தவித மாற்றமின்றி விற்பனையாகிறது. இந்த நிலையில் ஆவின் பால் பாக்கெட்டின் விலை அதிகரிக்கப்பட்டுள்ளதால் தமிழகத்தில் ஆவின் பால் விற்பனை வழக்கத்தை விட 5% குறைந்துள்ளது.