வைரம் கிடைப்பதாக பரவிய தகவலால் கூட்டம் கூட்டமாக குவிந்த மக்கள்

குவிந்த மக்கள் கூட்டம்... நாகாலாந்தில் வைரம் வெட்டி எடுக்க வாய்ப்பு உள்ளதாக என்பது குறித்து ஆராய உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

நாகாலாந்து மாநிலத்தின் மோன் மாவட்டத்தின் வாக்சிங் கிராமத்தில் இரு தினங்களுக்கு முன்னர் நிலத்தில் விவசாயம் செய்த ஒருவரின் கலப்பையில் பளபளப்பான கல் ஒன்று சிக்கியது. அது வைரமாக இருக்கக்கூடுமென அந்த கிராமத்தில் தகவல் பரவியது.

இதையடுத்து அந்த கிராமத்திற்கு மக்கள் கூட்டம், கூட்டமாக செல்லத் தொடங்கி உள்ளனர். இதனிடையே அந்த கிராமத்தில் வைரம் உள்ளதா என்பதை ஆராய நாகாலாந்து புவியியல் மற்றும் சுரங்கத்துறை இயக்குநர் எஸ்.மேனன் உத்தரவிட்டு உள்ளார்.

புவியியல் ஆய்வாளர்கள் அப்தெங் லோதா, லோங்கிரிகெபா, கென்யெலோ ரெங்மா, டேவிட் கோயூப்யெனி ஆகியோர் அடங்கிய குழு நேரடி ஆய்வு நடத்தவும் அவர் கட்டளையிட்டுள்ளார். கொரோனா பரவல் உள்ள இந்த காலக்கட்டத்தில் மக்கள் கூட்டமாக இதுபோன்ற நடவடிக்கைகளில் இறங்கி இருப்பது அதிகாரிகளுக்கு பெரும் சங்கடத்தை ஏற்படுத்தி உள்ளது,