மகாராஷ்டிராவில் அதிகரிக்கும் கொரோனா பாதிப்பு; ஊரடங்கு மே 31-ம் தேதி வரை நீட்டிப்பு

இந்தியாவில் நாளுக்குநாள் கொரோனா வைரஸின் ஆதிக்கம் அதிகரித்து வருகிறது. நாட்டிலேயே அதிகபட்சமாக மகாராஷ்டிராவில் பாதிப்பு அதிகளவில் உள்ளது. தலைநகரான மும்பையின் தாராவி பகுதியில் நாளுக்குநாள் நிலைமை மோசடைமடைந்து வருவது அனைவரையும் கவலைக்குள் ஆழ்த்தி வருகின்றது.

நேற்று ஒரே நாளில் மகாராஷ்டிராவில்1606 பேருக்கு கொரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டது. இதனால் கொரோனா வைரசால் பாதிப்பு அடைந்தோரின் எண்ணிக்கை 30,706 ஆக அதிகரித்துள்ளது. பலியானோர் எண்ணிக்கை 1135 ஆக உயர்ந்துள்ளது.

இந்நிலையில், 3-ம் கட்ட ஊரடங்கு இன்றுடன் நிறைவடைவதையடுத்து மகாராஷ்டிராவில் வருகிற 31-ந்தேதி வரை ஊரடங்கு உத்தரவு நீட்டிக்கப்படுகிறது என அரசு அறிவித்துள்ளது. எனவே, வருகிற 31-ம் தேதி வரை இப்போதுள்ள நடவடிக்கைகள் அனைத்தையும் தொடர்ந்து கடைபிடிக்க வேண்டும். மேலும் தளர்வு குறித்த அறிவிப்புகள் விரைவில் வெளியிடப்படும். இவ்வாறு மகாராஷ்டிரா முதல்-மந்திரி தெரிவித்துள்ளார்.