ஹாமூன் புயல் இன்று வங்கதேசத்தில் கரையை கடக்கும் ..வானிலை மையம் தெரிவிப்பு

சென்னை : வானிலை ஆய்வு மைய இயக்குநர் பா.செந்தாமரை கண்ணன் வெளியிட்ட செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது :- மத்திய மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் கடந்த 23-ம் தேதி நிலவிய ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் அன்று மாலை 5.30 மணி அளவில் ஹாமூன் புயலாக வலுப்பெற்றது.

இதையடுத்து அந்த புயல் நேற்று (அக்.24) அதிகாலை 2.30 மணி அளவில் தீவிர புயலாகவடமேற்கு வங்கக்கடல் பகுதிகளில் நிலவியது. காலை 8.30 மணிஅளவில் மேலும் வலுப்பெற்று, வடமேற்கு மற்றும் அதை ஒட்டியவடகிழக்கு வங்கக்கடல் பகுதிகளில் மிக தீவிர புயலாக நிலவியது.