20 ஆயிரம் கோழிகளை அழிக்க முடிவு கேரளாவில் முடிவு

கேரளா: 20 ஆயிரம் கோழிகளை அழிக்க முடிவு... கேரளாவில் பறவை காய்ச்சல் பாதிப்பு ஏற்பட்டிருப்பதால் 20 ஆயிரம் கோழிகளை அழிக்க மாவட்ட நிர்வாகம் அதிரடி முடிவெடுத்துள்ளது.

இந்தியாவில் பறவை காய்ச்சல் அடிக்கடி ஏற்படுவதால் ஆயிரக்கணக்கான கோழிகள் அழிக்கப்படுவது மட்டுமல்லாமல் கோழி மற்றும் முட்டை விற்பனை வீழ்ச்சி அடைந்து கோழிப்பண்ணையாளர்கள் பாதிக்கப்படுகின்றார்கள். இந்த சூழலில் கேரளாவில் கடந்த இரண்டு வருடங்களாக மூன்றாவது முறையாக பறவைக் காய்ச்சல் பாதிப்பு ஏற்பட்டிருக்கிறது.

கேரள மாநிலம் ஆலப்புழா மாவட்டத்தில் கடந்த வாரம் 1500 வாத்துக்கள் திடீரென உயிரிழந்துள்ளது. ஏராளமான வாத்துக்கள் உயிரிழந்திருப்பதால் கால்நடை பராமரிப்பு துறையினர் இறந்த வாத்துகளின் மாதிரிகளை சேகரித்து போபாலில் உள்ள தேசிய உயிர் பாதுகாப்பு விலங்கின நோய் பரிசோதனை மையத்திற்கு அனுப்பி வைத்துள்ளனர்.

அங்கு பரிசோதனையின் முடிவில் பறவை காய்ச்சல் தாக்கம் உறுதி செய்யப்பட்டிருக்கிறது. இதனை தொடர்ந்து ஆலப்புழா மாவட்டம் வாழுதனம் நகராட்சி கட்டுப்பாட்டு பகுதியாக அறிவிக்கப்பட்டு அங்கிருந்து பறவை காய்ச்சல் வேறு இடங்களுக்கு பரவாமல் தடுப்பதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.


இதனை அடுத்து கடந்த வாரம் 1500 வாத்துக்கள் உயிரிழந்த நிலையில் இருபதாயிரம் கோழிகளை அழிக்க மாவட்ட நிர்வாகம் முடிவு செய்து இருக்கின்றது.