அரசு பள்ளிகளில் இது பொருத்துவது உறுதி ... டெல்லி அரசு தெரிவிப்பு

புது டெல்லி : சிசிடிவி கேமரா இனி கட்டாயம் .... சமீப காலமாகவே பள்ளிகளில் நடக்கும் குற்ற சம்பவங்கள் உயந்து வருவதை நாம் அதிகமாக காண முடிகிறது. இதனால் அரசு சார்பில் இதற்கான தடுப்பு நடவடிக்கைகள் பற்றி தீவிரம் காட்டப்பட்டு வருகிறது. இந்நிலையில், கடந்த 2017ம் ஆண்டு முதல் டெல்லி அரசு, அரசு பள்ளி வகுப்பறைகளில் சிசிடிவி கேமரா பொறுத்த முடிவு செய்து அதற்கான நடவடிக்கைகளை எடுத்தது.

ஆனால், வகுப்பறைகளில் சிசிடிவி கேமரா பொருத்துவது மாணவர்களின் பாதுகாப்பிற்கு அச்சுறுத்தலாக இருக்கும் என்று பெற்றோர் சங்கம் சார்பில் உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது.

இதையடுத்து இரண்டு தரப்பினருக்கும் இடையில் நீண்ட கருத்து வேறுபாடுகள் நிலவி வந்தது. கேமரா பொருத்துவது மாணவர்களின் தனியுரிமையை பாதிக்கப்பதாகவும் கூறப்பட்டது.

ஆனால் பொதுவெளியான பள்ளி வகுப்பறைகளில் மாணவர்களின் தனியுரிமை என்பது வினோதமாக உள்ளதாகவும், மாணவர்களின் நலன் மற்றும் பாதுகாப்பு காரணங்களுக்காக சிசிடிவி கேமரா பொருத்துவது உறுதி என நீதிமன்றத்தில் டெல்லி அரசு தெரிவித்துள்ளது.