திரிகோணமலையை நோக்கி நகரும் காற்றழுத்த தாழ்வு

சென்னை: காற்றழுத்த தாழ்வு திரிகோணமலையை அருகே நண்பகலில் கடலோர பகுதிக்கு நகரும் என்று கூறப்பட்டுள்ளது

வங்கக் கடலில் தோன்றிய காற்றழுத்த தாழ்வு தற்போது காற்றழுத்த தாழ்வு மண்டலமாக உருவாகி இலங்கை மற்றும் குமரி கடல் இடையே கரையை கடக்கும் என்று கூறப்பட்டது.

இந்த நிலையில் தற்போது வந்துள்ள வானிலை அறிவிப்பின்படி தென்மேற்கு வங்கக்கடல் பகுதியில் நிலவும் காற்றழுத்த தாழ்வு மண்டலம் இலங்கையின் திருகோணமலையில் இருந்து 110 கிலோமீட்டர் தொலைவில் நிலை கொண்டிருப்பதாகவும் இந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் திரிகோணமலையை அருகே நண்பகலில் கடலோர பகுதிக்கு நகரும் என்றும் கூறப்பட்டுள்ளது

இதன் காரணமாக இலங்கையின் அனைத்து மாவட்டங்களுக்கும் எச்சரிக்கை விடப்பட்டு உள்ளதாகவும் நாடு முழுவதும் சூறைக் காற்று வீசும் என்ற எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக பொதுமக்கள் பாதுகாப்பாக வீட்டில் இருக்கும் படியும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.