தேர்தலில் கட்சிகள் பெற்ற ஆசனங்கள் குறித்த விபரம்

வெற்றி பெற்றவர்கள் விபரம்... 2020ஆம் ஆண்டு நாடாளுமன்றத் தேர்தலில் 196 ஆசனங்கள் வாக்கெடுப்பு மூலம் தெரிவு செய்யப்பட்டதுடன், 29 போனஸ் ஆசனங்களும் வழங்கப்பட்டுள்ளன.

அதன் அடிப்படையில் கட்சிகள் பெற்றுக்கொண்ட 125 ஆசனங்களின் முழு விபரங்கள் வெளியிடப்பட்டுள்ளன. அதற்கமைய ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன 128 ஆசனங்களையும், 17 போனஸ் ஆசனங்களையும் பெற்று மொத்தமாக 145 ஆசனங்களைப் பெற்றுக்கொண்டுள்ளது.

அதேநேரம், ஐக்கிய மக்கள் சக்தி 47 ஆசனங்களையும், 7 போனஸ் ஆசனங்களையும் பெற்று மொத்தமாக 54 ஆசனங்களைப் பெற்றுக்கொண்டுள்ளது. அதேபோல இலங்கை தமிழரசுக் கட்சி 9 ஆசனங்களையும் 1 போனஸ் ஆசனமும் பெற்று மொத்தமாக 10 ஆசனங்களைப் பெற்றுக்கொண்டுள்ளன.

தேசிய மக்கள் சக்தி 2 ஆசனங்களையும் 1 போனஸ் ஆசனத்தையும் பெற்று மொத்தமாக 3 ஆசனங்களைப் பெற்றுக்கொண்டுள்ளது. அதேநேரம் ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சி மொத்தமாக 2 ஆசனங்களை பெற்றுக்கொண்டுள்ளது.

அகில இலங்கை தமிழ் காங்கிரஸ் 1 ஆசனத்தையும் 1 போனஸ் ஆசனத்தையுத் பெற்று மொத்தமாக 2 ஆசனங்களைப் பெற்றுக்கொண்டுள்ளது. தேசிய காங்கிரஸ் கட்சி, ஶ்ரீலங்கா சுதந்திரக் கட்சி, தமிழ் மக்கள் தேசிய கூட்டணி, தமிழ் மக்கள் விடுதலை புலிகள், ஶ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ், அகில இலங்கை மக்கள் காங்கிரஸ், முஸ்லிம் தேசிய கூட்டணி, ஐக்கிய தேசிய கட்சி, அபே ஜன பல கட்சி ஆகியன தலா ஒவ்வொரு ஆசனங்களையும் பெற்றுக்கொண்டுள்ளன.