தேர்தலில் தோல்வியை சந்தித்த காரணத்தால் ராஷ்டிரிய ஜனதா தள கட்சியினர் இப்படி செய்தனரா ?

சமீபத்தில் பீகார் மாநிலத்தில் சட்டமன்ற தேர்தல் நடந்து முடிந்தது. இந்த தேர்தல் முடிவில், தேசிய ஜனநாய கூட்டணி பெரும்பான்மையுடன் வெற்றி பெற்றது. தேர்தல் வாக்கு எண்ணிக்கைக்கு முந்தைய கருத்து கணிப்புகளில் ராஷ்டிரிய ஜனதா தளம் கட்சி வெற்றி பெறும் என தெரிவிக்கப்பட்டு இருந்தது.

இந்நிலையில், தேர்தல் வெற்றியை கொண்டாட ராஷ்டிரிய ஜனதா தளம் கொண்டு வந்த இனிப்புகள் தேர்தல் முடிவுகளுக்கு பின் கட்சி அலுவலகத்தில் குழியில் போடப்படுகிறது எனும் தலைப்பில் இரு புகைப்படங்கள் வைரலாகி வருகிறது. இது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

இந்த வைரல் பதிவுகளை ஆய்வு செய்தபோது, அவற்றுடன் இணைக்கப்பட்ட புகைப்படங்கள் ஹரியானா மற்றும் மத்திய பிரதேச மாநிலங்களில் எடுக்கப்பட்டவை என தெரியவந்துள்ளது. இவை அம்மாநில சுகாதார துறை அலுவலர்கள் கெட்டு போன உணவுகளை அழிக்க நடவடிக்கை மேற்கொண்ட போது எடுக்கப்பட்ட புகைப்படங்கள் ஆகும்.

அதன்படி வைரலாகும் புகைப்படங்களுக்கும், சமீபத்திய பீகார் தேர்தல் முடிவுகளுக்கும் எந்த தொடர்பும் இல்லை என தெளிவாகிவிட்டது. போலி செய்திகளால் பல்வேறு பாதிப்புகள் ஏற்படுகின்றன. சமயங்களில் போலி செய்தி பாதிப்பு காரணமாக உயிரிழப்புகளும் ஏற்பட்டு இருக்கின்றன.போலி செய்திகளை பரப்பாதீர்கள்.