தமிழகத்தில் ஒரே நாளில் 5,679 பேருக்கு கொரோனா தொற்று உறுதி; மாவட்ட வாரியாக தகவல்

தமிழகத்தில் கொரோனா வைரஸ் வேகமாக பரவி வருகிறது. கடந்த 24 மணி நேரத்தில் மேலும் 5,679 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு உள்ளது. இதனால் மொத்த கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 5,69,370-ஆக உயர்ந்துள்ளதாக என சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

தமிழகத்தில் கொரோனாவில் இருந்து இதுவரை 5,13,836 குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். நேற்று மட்டும் 5,626 பேர் குணமடைந்துள்ளனர். தமிழகத்தில் கொரோனாவால் நேற்று மேலும் 72 பேர் உயிரிழந்துள்ளனர். மொத்தம் பலி எண்ணிக்கை 9,148-ஆக உயர்ந்துள்ளது.

சென்னையில் நேற்று ஒரே நாளில் 1,193 பேர் கொரோனானால் பாதிக்கப்பட்டுள்ளனர். சென்னையில் மொத்தம் 1,60,926 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். தமிழகத்தில் இதுவரை 67,01,677 பேருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. நேற்று மட்டும் 93,002 மாதிரிகள் கொரோனா பரிசோதனை செய்யப்பட்டுள்ளது.

இந்தியாவிலேயே அதிகபட்சமாக தமிழகத்தில் மொத்தம் 182 மையங்களில் கொரோனா பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. தற்போது 46,386 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். தமிழகத்தில் இதுவரை கொரோனா பாதிக்கப்பட்டவர்களில் மொத்தம் 3,43,470 பேர் ஆண்கள், இன்றைக்கு மட்டும் 3,455 ஆண்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.

தமிழகத்தில் இதுவரை கொரோனா பாதிக்கப்பட்டவர்களில் மொத்தம் 2,25,870 பேர் பெண்கள், நேற்றைக்கு மட்டும் 2,224 பெண்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். தமிழகத்தில் இதுவரை மொத்தம் 30 திருநங்கைக்கு கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

மாவட்ட வாரியாக நேற்று புதிதாக கொரோனா பரவியவர்களின் எண்ணிக்கை:-
அரியலூர் - 28
செங்கல்பட்டு - 277
சென்னை - 1193
கோவை - 661
கடலூர் - 235
தர்மபுரி - 148
திண்டுக்கல் - 58
ஈரோடு - 151
கள்ளக்குறிச்சி - 57
காஞ்சிபுரம் - 165
கன்னியாகுமரி - 86
கரூர் - 49
கிருஷ்ணகிரி - 104
மதுரை - 71
நாகை - 35
நாமக்கல் - 115
நீலகிரி - 137
பெரம்பலூர் - 17
புதுக்கோட்டை - 66
ராமநாதபுரம் - 17
ராணிப்பேட்டை - 65
சேலம் - 297
சிவகங்கை - 46
தென்காசி - 53
தஞ்சாவூர் - 150
தேனி - 66
திருப்பத்தூர் - 67
திருவள்ளூர் - 229
திருவண்ணாமலை - 173
திருவாரூர் - 139
தூத்துக்குடி - 46
திருநெல்வேலி - 77
திருப்பூர் - 158
திருச்சி - 107
வேலூர் - 125
விழுப்புரம் - 162
விருதுநகர் - 42
விமான நிலைய கண்காணிப்பு - 7