திமுக பைல்ஸ் பார்ட்-2 வெளியிடப்படும்... அண்ணாமலை அறிவிப்பு

கோவை: திமுக பைல்ஸ் பார்ட்-2 வெளியிடப்படும் என்று பாஜக மாநில தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.

கோவை விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், வரும் 28-ஆம் தேதி புதிய நாடாளுமன்ற கட்டிடத்தில் தமிழர்களுக்கு பெருமை சேர்க்கும் விதமாக நம்முடைய செங்கோல் அங்கே செல்ல இருக்கிறது.

தமிழகத்தில் நடைபெற்று வரும் வருமான வரித்துறை சோதனை எதிர்பார்த்த ஒன்றுதான். கரூரில் சோதனைக்கு சென்ற அதிகாரிகள் தாக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இதற்கு முழு பொறுப்பையும் திமுக தான் ஏற்றுக் கொள்ள வேண்டும். திமுக பைல்ஸ் பார்ட்-2 வெளியிடப்படும்

என் மண் என் மக்கள் என்ற பயணம் ஜூலை ஒன்பதாம் தேதி துவங்க உள்ளது. அந்த பயணத்திலும் ஊழலை பற்றி மட்டும்தான் பேச இருக்கிறேன். இவ்வாறு அவர் தெரிவித்தார்