பால் விலை ஏன் உயருகிறது தெரியுமா?

சென்னை: தற்போது பிறந்த குழந்தை முதல் முதிவர்கள் வரை பால் சார்ந்த பொருட்களை அதிகம் விரும்பி பருகுகின்றனர். இதனால் பால் விலை அதிகரித்து கொண்டே வருகிறது.

மாடுகளுக்கான தீவனச் செலவு தற்போது உயர்ந்து வருவதும் பால் விலை உயர்வுக்கு முக்கிய காரணமாகும்.

இதில் குறிப்பாக மழை காலத்தில் தீவனங்களின் விலை 12 முதல் 15 சதவீதம் வரையில் அதிகரித்துள்ளது.எனவே இதன் எதிரொலியாக கடந்த நிதியாண்டில் மட்டும் பால் விலை 12 சதவீதம் வரை உயர்ந்துள்ளது.

இவ்வாறு உயர்ந்து வரும் அத்திவாசிய பொருட்களின் விலை உயர்வை முன்னிட்டு பால் துறையில் பணியாற்றும் ஊழியர்கள் சம்பளம் மற்றும் ஊழியர்கள் சார்ந்த செலவுகளும் அதிகரித்து கொண்டே வருகிறது. இதனால் பால் உற்பத்தியாளர்கள் பால் விலை உயர்ந்து வருகிறது.

மேலும் இந்தியாவில் இருந்து மற்ற நாடுகளுக்கு பால் பொருட்களின் ஏற்றுமதி அதிகரித்து கொண்டே வருகிறது.இதையடுத்து அதன்படி முந்தைய நிதியாண்டை விட கடந்த நிதியாண்டில், பால் பொருட்கள் ஏற்றுமதி 391.59 மில்லியன் டாலராக அதிகரித்துள்ளது. இவ்வாறு சப்ளை டிமாண்ட் பிரச்சனை காரணமாகவும் பால் விலை லிட்டருக்கு ரூ.57.15 என்று தாறுமாறாக ஏறியுள்ளது.