கவலைபடாதீர்கள்... எனது சில நண்பர்கள் வந்து நிற்கிறார்கள்; எலான் மஸ்க் கிண்டல்

வாஷிங்டன்: அமெரிக்க வானில் கடந்த சில நாட்களாக மர்ம பலூன்களும், மர்ம பொருட்களும் பறந்து வருகின்றன. இந்த மர்ம பொருட்களை அமெரிக்க விமானப்படை சுட்டு வீழ்த்தி வருகிறது.

கடந்த 4ம் தேதி தங்கள் நாட்டுக்குள் நுழைந்த சீன உளவு பலூனை அமெரிக்கா சுட்டு வீழ்த்தியது. இந்த பலூன் வானிலை ஆராய்ச்சிக்காக பயன்படுத்தப்பட்டதாக சீனா தெரிவித்துள்ளது.

இந்த சம்பவத்தைத் தொடர்ந்து, கடந்த வெள்ளிக்கிழமை அலாஸ்கன் வான் எல்லைக்குள் நுழைந்த மற்றொரு மர்மப் பொருளை அமெரிக்க போர் விமானங்கள் சுட்டு வீழ்த்தின. இதன்பிறகு, கடந்த சனிக்கிழமை அமெரிக்கா-கனடா வான்பரப்பில் பறந்து கொண்டிருந்த மற்றொரு மர்ம பொருள் அமெரிக்க போர் விமானத்தால் சுட்டு வீழ்த்தப்பட்டது.

கனடாவின் யுகோன் மாகாணம் அருகே அமெரிக்க போர் விமானத்தால் இந்த மர்ம பொருள் சுட்டு வீழ்த்தப்பட்டது. இந்த மூன்று சம்பவங்கள் அமெரிக்காவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில், அமெரிக்க வான்பரப்பில் பறந்த மர்ம பலூன்கள் மற்றும் பொருள்கள் அமெரிக்க போர் விமானங்களால் சுட்டு வீழ்த்தப்பட்டு வருகின்றன.

இந்நிலையில், இந்த சம்பவத்தை எலியன்களுடன் தொடர்புபடுத்தி டெஸ்லா மற்றும் டுவிட்டர் நிறுவனங்களின் தலைவரும், உலகின் பெரும் பணக்காரருமான எலான் மஸ்க் நகைச்சுவையாக டுவிட் செய்துள்ளார். இது தொடர்பாக எலான் மஸ்க் தனது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்ட பதிவில், கவலைபடாதீர்கள், எனது சில நண்பர்கள் வந்து நிற்கிறார்கள்’ என்று தெரிவித்துள்ளார்.