வறண்ட வானிலை அடுத்த 4 நாட்களுக்கு நீடிக்கும்

சென்னை: தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை முடிவுக்கு வந்த நிலையில் தற்போது வறண்ட வானிலை நிலவி கொண்டு வருகிறது. மேலும் அத்துடன் வடமாநிலங்களை போல தமிழகத்திலும் கடும் குளிர் மக்களை வாட்டி வதைத்து வருகிறது. அதிக காலை நேரங்களில் மலை பகுதிகளில் அடர் பனிமூட்டம் தென்படுகிறது.

இதையடுத்து இந்நிலையில் சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட அறிக்கையில் இன்றும் நாளையும் தமிழகத்தின் உள்‌ மாவட்டங்களில்‌ குறைந்தபட்ச வெப்பநிலை இயல்பை விட 2 முதல்‌ 3 டிகிரி செல்‌சியஸ்‌ குறைவாக இருக்கக்கூடும்‌.

அத்துடன் ஓரிரு இடங்களில்‌ அதிகாலை வேளையில்‌ லேசான பனி மூட்டத்திற்கு வாய்ப்புள்ளதாகவும் தெரிவித்துள்ளது.நீலகிரி மாவட்டத்தின்‌ மலைப்பகுதிகளில்‌ இரவு நேரங்களில்‌ ஓரிரு இடங்களில்‌ உறை பனிக்கு வாய்ப்புள்ளது. மேலும் ஜன. 20, 21, 22ம் தேதிகளில் தமிழ்நாடு மற்றும் புதுவை பகுதிகளில் வறண்ட வானிலை நிலவக்கூடும்‌ என வானிலை மையம் அறிவித்துள்ளது.

மேலும் சென்னையை பொறுத்தவரை அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம்‌ ஓரளவு மேகமூட்டத்துடன்‌ காணப்படும்‌. அதிகபட்ச வெப்பநிலை 30 டிகிரி செல்சியஸ்‌ மற்றும்‌ குறைந்தபட்ச வெப்பநிலை 21 டிகிரி செல்‌சயஸ்‌ அளவில்‌ இருக்கக்கூடும்‌ எனவும் தெரிவித்துள்ளது.