இந்த தினங்களில் தமிழகம் மற்றும் புதுவையில் வறண்ட வானிலையே நிலவும்

சென்னை: பிப்ரவரி 7, 8, 9, 10 ஆகிய தினங்களில் வறண்ட வானிலை நிலவக்கூடும் .... வங்கக்கடலில் அண்மையில் உருவான காற்றழுத்த தாழ்வு மண்டலம் காரணமாக தமிழகம் மற்றும் புதுவையில் லேசான மழையும் ஓரிரு இடங்களில் கனமழையும் பெய்தது.

இதனை அடுத்து இந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் திரிகோணமலைக்கும் மட்டக்களப்புக்கும் இடையே கடந்த 3ம் தேதி அதிகாலை கரையை கடந்தது. எனவே இதன் காரணமாக வட கடலோர மாவட்டங்களிலும் புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் கனமழை பெய்தது.

இந்நிலையில் சென்னை வானிலை ஆய்வு மையம் இன்று வெளியிட்ட அறிக்கையில், கிழக்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக இன்று தமிழ்நாடு மற்றும் புதுவையில் ஓரிரு இடங்களில் லேசான முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என தெரிவித்துள்ளது.

மேலும் பிப்ரவரி 7, 8, 9, 10 ஆகிய தினங்களில் தமிழகம் மற்றும் புதுவையில் வறண்ட வானிலையே நிலவும் என தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் சென்னையை பொறுத்தவரை அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவுக்கு மேகமூட்டத்துடன் காணப்படும்.மேலும் அதிகபட்ச வெப்பநிலை 21 – 22 செல்சியஸ் என்ற அளவில் இருக்கும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.