கனமழை காரணமாக நீலகிரி மாவட்டத்தில் உள்ள அனைத்து பள்ளி, கல்லூரிகளுக்கும் இன்று விடுமுறை அறிவிப்பு

நீலகிரி: கேரளாவில் தென்மேற்கு பருவமழை மிக தீவிரம் அடைந்து இருக்கிறது. மேலும் தமிழகத்தின் கடலோர பகுதிகளின் வளிமண்டலத்தில் நிலவும் மேலடுக்கு சூழற்சி, தமிழகத்தின் வளிமண்டல பகுதியின் மத்தியில் கிழக்குதிசை காற்றும், மேற்கு திசை காற்றும் சந்திப்பது ஆகிய காரணங்களால் தமிழகத்தில் மழை பெய்து கொண்டு வருகிறது.

மேலும் நீலகிரி, கோவை மாவட்டங்களில் கன முதல் அதி கனமழை பெய்ய வாய்ப்புள்ளது என்று வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. இதனையடுத்து நீலகிரி மாவட்டத்தில் பள்ளி, கல்லூரிகளுக்கு இன்று (வியாழக்கிழமை) விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

இதை தொடர்ந்து இந்த அரசு உத்தரவை மீறி இயங்கும் பள்ளி, கல்லூரிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று நீலகிரி மாவட்ட கலெக்டர் அம்ரித் அவர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

மேலும் கனமழை காரணமாக நேற்றும் நீலகிரியில் பள்ளி, கல்லூரிகள் ஆகியவற்றிற்கு விடுமுறை அறிவிக்கப்பட்டிருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.